Wednesday, November 11, 2009

கொஞ்சம் சோக்கு....

கல்லூரி வாழ்க்கையின் மூன்று முத்தான நகைச்சுவைகள்....

1.மச்சான் disturb பண்ணாதடா ,நான் படிக்கணும்.......

2.ச்சே,கிளாஸ் இல்லை,வாங்கடா லைப்ரரி போலாம்.....

last but not the least.....

3.சார்,ஒன் டவுட்.....
--------------------------------------------------
மெடிக்கல் காலேஜ் டீன்:எங்க பசங்களுக்கு தான் தைரியம் அதிகம்,அத எங்க வேணா prove பண்ண முடியும்....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி :ஹா ஹா ஹா,பாக்கலாம்....

மெடிக்கல் காலேஜ் டீன்:( ஒரு மெடிக்கல் மாணவனை கூப்பிட்டு)டேய்,இந்த கடல்ல சுறா மீன் நிறைய இருக்கு,இதுல குதிச்சு நீந்தி வா...

(மாணவன் குதித்து நீந்தி வந்தவுடன்)

மெடிக்கல் காலேஜ் டீன்:see their guts....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி:(ஒரு ஆர்ட்ஸ் மாணவனை கூப்பிட்டு )டேய் இந்த கடல்ல குதிடா....

ஆர்ட்ஸ் மாணவன்:முடியாது போடா....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி:see their guts....
--------------------------------------------
சூப்பர் பஞ்ச்....

"உன்னிடம் இருப்பதை உலகுக்கு காட்டு,
உலகம் உன்னை நேசிக்கும்....."
இப்படிக்கு:நமீதா.....
--------------------------------------------

மாணவர்கள் காலேஜில் போர் அடித்தால் போகும் இடங்கள்...

முதல் பெஞ்ச் மாணவர்கள்:வாடா லைப்ரரி போகலாம்...

இரண்டாம் பெஞ்ச் மாணவர்கள்:உங்க வீட்டுக்கு போகலாம் வாடா....

மூன்றாம் பெஞ்ச் மாணவர்கள்:வாங்கடா படத்துக்கு போகலாம்...

கடைசி பெஞ்ச் சிங்க குட்டிகள்:மச்சான் போர் அடிக்குது வாடா க்ளாஸ்க்கு போகலாம்.....
-------------------------------------------------------

ஒரு குட்டி டயலாக்....
சொன்னவர் socrates.....

"ஆடம்பரம் என்பது,நாம் தேடி கொள்ளும் வறுமை"


உங்களுக்கு மிகவும் பிடித்தது?


நன்றி நண்பர்களே......

Monday, November 9, 2009

எனக்குப் பிடித்த சில விளம்பரங்களின் காணொளிகள்...

உங்களுக்கும் மிகவே பிடிக்கும்,
இந்த காணொளிகளை பாருங்களேன்....




video

முதல் காணொளியில் வரும் சிறுவனின் expressions மிக அழகாக இருக்கும்.....


video

இது என்னை மிகவே கவர்ந்தது,ஒவ்வொரு காட்சியிலும் பல அர்த்தங்கள் உள்ளது,மரம் கீழே விழுந்து கிடப்பதற்கே , I hate this country என்று சலித்து கொள்ளும் பெண்,தூங்கி வழியும் போலீஸ்,முக்கிய பிரமுகருக்காக மற்றவர்களை அலட்சியம் செய்யும் அதிகாரி,சிறுவனின் நம்பிக்கை,இளைஞர்களின் யாராவது தொடங்கட்டும் என்று காத்திருக்கும் இயல்பு என்று அழகு....


video



இந்த வீடியோ,"creativity at it's best " என்பேன்....

இந்த விளம்பரம் மட்டும் 606 டேக் வாங்கியதாம்....
சலித்து,நொந்து நூடுல்ஸ் ஆகி எடுத்துள்ளனர்,ஆனாலும் உழைப்பின் பலம் தெரிகிறது.....




நன்றி நண்பர்களே,உங்களுக்கு பிடித்த காணொளி எது என்பதை சொல்லுங்களேன்....


அன்புடன் கார்த்தி....

Sunday, November 8, 2009

கடவுளும் டாஸ்மாக்கும்....(குட்டி ஜோக்)


டாஸ்மாக், டாஸ்மாக் என்கிறார்களே அதில் என்னதான் இருக்கும் என்று கண்டறிய கடவுள் மனித அவதாரம் எடுத்து ஒரு டாஸ்மாக் கடைக்குள் நுழைகிறார்,

முதலில் ஒரு ரம் வாங்கி ராவாக அடிப்பதை பார்த்த அருகில் இருப்பவன் ஆச்சர்யப்பட்டு போனான்.

பிறகு கடவுள் ஒரு விஸ்கி வாங்கி அதையும் ஒரே மூச்சில் முடித்து விட,
இவனுக்கு இன்னும் ஆச்சர்யம்,
இந்த முறை கடவுள் நேராக steady ஆக சென்று ஒரு பீர் வாங்கி வந்து அதையும் அடித்து விட்டு,நேராக கொஞ்சம் தள்ளாட்டம் கூட இல்லாமல் நின்றிருக்க,

அருகில் இருப்பவன்,ஆச்சர்யத்தை கேட்டே விட்டான்,

அருகில் இருப்பவன்:யோவ்!!!இவ்வளவு அடிச்சும் உனக்கு போதையே வரலையா?

கடவுள்:மை சன்,நான் தான் கடவுள்,போதைஎன்றால்?

அருகில் இருப்பவன்:அடங் கொக்க மக்க இப்பதான்யா உனக்கு போதையே ஏறி இருக்கு...!!!!!!!!!!!!

ஹி ஹி ஹி ...
நண்பர்களே இது நகைச்சுவைக்காகவே.....
தவறாக எண்ண வேண்டாம்.....

நன்றி நண்பர்களே.....

கூல் மற்றும் க்யூட் வீடியோ...

video


ஹா ஹா ஹா....
இந்த வீடியோ பாருங்கள் நண்பர்களே,நான் மிகவும் ரசித்தது...
என் சித்தப்பா பையனுக்கு வேஷம் போட்டு பேச வைத்து மொபைல் இல் சிக்கியது....

குட்டி தம்பி பெயர்:செங்கோட்டு வேலன்

நன்றி நண்பர்களே.....

Saturday, November 7, 2009

நகைச்சுவை:சில சோக்கு.....+ ஒரு மொக்கை


son:அப்பா ,கிளாஸ் ல ஜோசப் என்னை அடிச்சிகிட்டே இருக்கான் அப்பா....

அப்பா:சார் கிட்ட சொல்ல வேண்டியது தானே....

மகன்:அவன் பேர் தான் ஜோசப்....

---------------------------
A good friend is one who will not let u to do wrong things,....
|


|


|

|

|

alone............

----------------------------------------------------------------


நண்பர் 1:நான் இந்த கோவிலுக்கு பத்து வருசமா வந்துட்டு இருக்கேன்.....

நண்பர் 2:உங்க வீட்ல இருந்து இந்த கோவில் அவ்வளவு தூரமா?

-----------------------------------

super quote:

Every man searching his second mother in the name of LOVER....

,
But every woman gets her 1st child in the name of her lover.....

பிறரின் முதுகுக்கு பின்னால் நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் தட்டி கொடுப்பது மட்டுமாக இருக்கட்டும்.....

----------------------------

நீங்கள் ஜெயிலுக்கு சென்றால்.....
Good Friend :கவலை படாதே ,வெளியே எடுத்தடலாம்.....

Best Friend: மச்சி கொசு கொஞ்சம் ஓவர்......

------------------------

Today's மொக்கை:

இன்னைக்கு இருக்குற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,

ஆனா....!

இன்னைக்கு வச்ச மீன் கொழம்பு, நாளைக்கு கருவாட்டு கொழம்பா ஆகுமா ?

யோசிங்க.......

------------------------

அம்மா:ஏன்டா இன்னைக்கு சீக்கிரமா ஸ்கூல் ல இருந்து வந்துட்ட?

மகன்:டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் தான் பதில் சொன்னே அதான்....

அம்மா:அப்படி சொல்லுடா என் செல்ல குட்டி....ஆமா என்ன கேட்டாங்க?

மகன்:யார் டா என் மேல ராக்கெட் விட்டது அப்படின்னாங்க,நாந்தான்னு பதில் சொன்னேன்,அனுப்பிட்டாங்க....

------------

நன்றி கார்த்தி.....

Tuesday, October 27, 2009

ஹி ஹி ஹி(don't guess)


அது இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை நேரம்,
அனைத்து மாணவர்களும் தங்கள் மிஸ்க்கு presentation வாங்கி வந்து இருந்தனர்...


முதலில் ஸ்வீட் கடைகாரர் பையன்,

மிஸ்:ஹ்ம்ம்ம்ம்,presentation கவர்க்குள்ளே,ஸ்வீட் தானே?

பையன்:ஹைய்யோ!எப்படி மிஸ் கண்டு பிடிச்சிங்க....

மிஸ்:அதான் உங்க மிஸ்....

இரண்டாவதாக,florist மகன்,

மிஸ்:ஹ்ம்ம்ம்ம்,கவர் குள்ளே,அழகான பூக்கள் தானே?

பைய்யன்:மிஸ் நீங்க உண்மையிலயே கிரேட்.....

அடுத்து,
wine ஷாப் owner பையன்,அவன் கொண்டு வந்த presentation light ஆக லீக் ஆகி இருப்பது தெரிய,

மிஸ்:ஒரு துளியை taste செய்து விட்டு,ஹ்ம்ம்,இது ஷாம்பைன் தானே,

பையன்:(களுக் என்று சிரித்து விட்டு )நோ மிஸ்...

மிஸ்:இன்னொரு துளியை taste செய்து விட்டு)ஹ்ம்ம் ,இது லேடீஸ் wine தானே?

பையன்:நோ மிஸ்!!!....

மிஸ்:ச்சே,எனக்கு தெரியல,நீயே சொல்லு,

பையன்:குட்டி,puppy.....

(ஹி ஹி ஹி)

மோரல்:குருட்டாம் போக்குல பதில் சொல்லாதிங்க...

Be Cool...
Stay Cool...

Sunday, October 25, 2009

இதை பார்த்த பிறகும் IRCTC டீ குடிப்பிங்க...

ட்ரைனில் போகும் போது எப்பொழுதும் டீயோ,காபியோ , சமோசா,போன்று எது எது கடந்து சென்றாலும் அதை ஒரு கை பார்க்கும் ரகம் நான்...
அந்த பக்கம் வரும் சத்தம் வந்ததுமே வயிற்றில் நம நம எனும்....

அதுக்கு வச்சாங்கையா ஆப்பு....
இந்த டீ preparation முறையை கொஞ்சம் பாருங்களேன்.....

முக்கியமான விஷயம் என்னவென்றால்,

1.டீ தயாரிப்பதற்கு நாம் ட்ரைனில் பாத்ரூமில் உபயோக படுத்தும் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர்....

2.டீ தயாரிப்பதுக்கு பாத்ரூம் அருகில் உள்ள ஸ்பெஷல்?? இடத்தை பயன்படுத்துகின்றனர்....

3.சூடுபடுத்த ,துருபிடித்த வாட்டர் heater உபயோகபடுத்துகின்றனர்....
இதன் விளைவை பிளாக்கர் வாழ் மருத்துவர்கள் யாராவது விளக்கினால் நன்று....

இப்பொழுது எல்லாம் டீயோ காபி யோ கடந்து செல்லும் போது வயிற்றில் சங்கடமான உணர்வு தான்...





IRCTC டீ குடிப்பதற்கு முன்,ஒரு முறைக்கு இருமுறை யோசித்து விட்டு குடிங்கள்,குடி குடியை கெடுக்கும் என்பது இதற்கும் பொருந்தும் போல....

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin